எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க.வின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்து "விடியல் எங்கே?" என்ற தலைப்பிலான ஆவணம் ஒன்றை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். அதில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 439 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் நலனைக் காக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, சென்னையின் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் ஏரிகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு திட்டம் உள்ளிட்டவை வெறும் அறிக்கையாகவே உள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று முழுமையாக 50 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற மேலாண்மை, ஊரகக் கட்டமைப்பு, சமூகநீதி சார்ந்த 7 உறுதிமொழிகளில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி சாடியுள்ளார்.